அடுத்த அதிரடியில் இறங்கிய ஹூண்டாய்… தனது புதிய மாடலை இறக்கி ஆச்சரியத்தில் ஆழ்த்திய சம்பவம்…
மக்கள் மனதில் சிறந்த இடத்தை பிடித்துள்ள நிறுவனமான ஹூண்டாய் நிறுவனம் தற்போது தனது புதிய இரண்டாம் தலைமுறை கிரெட்டா மாடலினை 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்தது. இந்த புதிய கிரெட்டா கார் ஏற்கனவே நம் அண்டை நாடான சீனாவில் விற்பனை செய்யப்படும் மாடலை போன்றே உள்ளது.
- இந்த கார் முற்றிலும் வித்தியாசமான டேஷ்போர்டு வடிவமைப்பு கொண்டிருக்கிறது.
-
புதிய ஹூண்டாய் சொனாட்டா ஸ்டீரிங் வீலில் ஆடியோ கண்ட்ரோல்,
-
ப்ளூடூத் டெலிபோனி மற்றும்
-
குரூயிஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
-
இந்திய மாடலில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்
-
இதன் டேஷ்போர்டு மற்றும் ஏ.சி. வென்ட் வடிவமைப்பு பிரத்யேகமாக காட்சியளிக்கிறது.
-
பெரிய இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் ஏ.சி. வென்ட்களின் கீழ் பொருத்தப்பட்டுள்ளது.
-
இது செல்டோஸ் மாடலில் உள்ளதை போன்று 10.25 இன்ச் யூனிட் வழங்கப்படலாம்.
-
இந்தியாவில் இந்த ஸ்கிரீன் கிடைமட்டமாக பொருத்தப்படும் என கூறப்படுகிறது.
-
இந்த புதிய கிரெட்டா இந்திய விலை மார்ச் 17-ம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.