அமெரிக்க அதிபர் டிரம்பின் நெருங்கிய ஆலோசகர் பதவி விலகல்!

ஹோப் ஹிக்ஸ் (Hope Hicks) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆலோசகரும், வெள்ளை மாளிகை தகவல் தொடர்பு இயக்குனருமான இவர்  பதவி விலகினார்.

அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு தொடர்பான விசாரணை, அதிபர் அலுவலகமான ஓவல் வரை தீவிரம் அடைந்துள்ளது. இதுகுறித்து ஹோப் ஹிக்ஸ்-இடம் ராபர்ட் முல்லர் குழு விசாரணை நடத்தியது.

Related image

இதை அடுத்தே பதவி விலகல் முடிவை ஹிக்ஸ் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 3 ஆண்டுகளாக டிரம்புடன் இணைந்து பணியாற்றிய ஹோப் ஹிக்ஸ், தமது பதவி விலகல் கடிதத்தை நேற்று வழங்கினார். ஏற்கெனவே அதிகாரிகள் சிலர் விலகிய நிலையில், டிரம்பின் தத்து மகள் போலவே பார்க்கப்பட்ட ஹிக்ஸ்-ம் விலகியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment