ஏர்செல்லிலிருந்து நெட்வொர்க் கிடைக்காத போதும் வேறு சேவைக்கு மாறுவது எப்படி?
நெட்வொர்க் கிடைக்காத போதும் ஏர்செல் மொபைல் வைத்திருப்பவர்கள் வேறு சேவைக்கு மாறலாம் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பயனாளர்களின் செல்போனில் நெட்வொர்க் செட்டிங் எனும் பகுதிக்கு சென்று நெட்வொர்க் தேர்வை ஆட்டோமேட்டிக் என்பதிலிருந்து மேனுவல் என மாற்ற வேண்டும். இதன் பின்னர் சேவை நிறுவனத்திற்கான தேர்வை ஏர்செல்லிலிருந்து ஏர்டெல் 2G என தேர்வு செய்து கொள்ளலாம்.
பின்னர் 10 இலக்க மொபைல் எண்ணை டைப் செய்து 1900 என்ற எண்ணுக்கு அனுப்பலாம். இதற்கு பதிலாக கிடைக்கும் யுனிக் போர்டிங் கோடு(Unique Porting Code) (UPC) எண்ணை மாற விரும்பும் தொலைத்தொடர்பு நிறுவனத்திடம் வழங்கினால் ஓரிரு நாட்களில் நெட்வொர்க் மாற்றப்படும்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.