போலார் கரடிகளுக்கு சர்வதேச பனிக்கரடிகள் தினத்தை முன்னிட்டு மீன்கள் விருந்து!
சர்வதேச போலார் கரடிகள் தினம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சாண்டியாகோ வனவிலங்குப் பூங்காவில் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, போலார் கரடிகளுக்கு 10 மூட்டை மீன்கள் விருந்தாக வழங்கப்பட்டன. தொட்டியிலும் குளத்திலும் நீந்திய மீன்களை பனிக்கரடிகள் லாவகமாக பிடிப்பதும் கவ்விச் செல்வதும் கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
வனவிலங்கு பூங்காவில் உள்ள மூன்று போலார் கரடிகளுக்கு மாதந்தோறும் மீன்கள், இறைச்சி போன்றவை வழங்கப்படுவதாக அங்குள்ள நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.