தமிழக முதல்வரை சந்தித்த எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணை தலைவர்.!
- எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் மற்றும் தேசிய துணை தலைவர் தெஹ்லான் பாகவி ஆகியோர் முதல்வரை நேரில் சந்தித்து, சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை, எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் மற்றும் தேசிய துணை தலைவர் தெஹ்லான் பாகவி ஆகியோர் நேரில் சந்தித்து, சுமார் ஒரு மணி நேர சந்திப்புக்கு பிறகு பேசிய பாகவி, சிஏஏ, என்ஆர்பி, என்ஆர்சி ஆகியவற்றின் எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற முதல்வரிடம் கோரிக்கை வலியுறுத்தியதாக தெரிவித்தனர்.
மேலும் அவர் கூறுகையில், சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்ட்டதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றும் வரை தங்களது போராட்டம் அமைதி வழியில் தொடரும் என்றும், தங்களின் கோரிக்கையை முதல்வர் ஏற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெஹ்லான் பாகவி தெரிவித்தார்.