இன்றைய (15.02.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ

Default Image

மேஷம் :  கல்யாண கனவுகள் கைகூடும் நாள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். முக்கியப் புள்ளிகளின் சந்திப்பு தொழில் முன்னேற்றத்திற்கு  உதவும்.

ரிஷபம் : தொலைபேசி வழி தகவலால் பகையொன்று நட்பாக மாறும் நாள்.உறவினர் வருகையால் உற்சாகம் காணப்படும். உத்தியோகத்தில் இருந்து வந்த எதிர்ப்புகள் மாறும். ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.

மிதுனம் : பணவரவு திருப்தி தரும் நாள்.சான்றோர்களின் சந்திப்பு கிடைக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். வாகனத்தை மாற்றம் செய்ய வேண்டும் என்று  சிந்திப்பீர்கள். வியாபாரத்தை விரிவுப் படுத்த எண்ணமானது மேலோங்கும்..

கடகம் : பொதுநல ஈடுபாடு காரணமாக இன்று புகழ் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் கூடும் சகோதர வழியில் உறுதுணைபுரிவர். பாதியில் கைவிடப்பட்ட காரியம் ஒன்று தற்போது முடிவடையும் சூழல் நிலவுகிறது. பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகி செல்வர்.

சிம்மம் : மதிப்பு- மரியாதை பன்மடங்கு  உயரும் நாள். பெரியவர்களின் வாழ்த்துக்களைப் பெறுவதம் மூலம் மகிழ்வீர்கள். எடுத்த காரியத்தை எளிதில் முடித்து வெற்றி  அடைவர்கள். அரசியலில் உள்ளவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும்.

கன்னி : கொடுத்த வாக்கை கொடுத்தவாரே காப்பாற்றி மகிழும் நாள். தொழிலில் கூடுதல் லாபம்  கிடைக்கும். தேங்கமடைந்த காரியங்கள் எல்லாம் தற்போது சுறுசுறுப்பாக நடைபெறும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

துலாம் : புண்ணிய காரியங்களுக்கு தொகையை செலவிட்டு மகிழும் நாள். சிந்தித்து செயல்பட வேண்டும். நண்பர்களிடம் நம்பி ஒப்படைத்த பொறுப்புகளுக்கு  எல்லாம் வெற்றி  கிடைக்கும்.

விருச்சிகம் : தொலைபேசி வழித்தகவலால் மனமகிழ்ச்சி ஏற்படும் நாள். வருமானம் திருப்தி தரும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.குடும்பத்தினரை அனுசரித்து செல்வது நல்லது.நண்பர்களின் சந்திப்பு தொழில் வளர்ச்சியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். ஆன்மிக ரீதியாக பயணம் ஒன்றை மேற்கொண்டு மனமகிழ்வீர்கள்.

தனுசு : மனதில் இனம் புரியாத சந்தோ‌ஷம் ஏற்படும் நாள். அனுமன் வழிபாடு ஆனந்தத்தை அள்ளித் தரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழுவீர்கள். தொழில் சம்பந்தமான புதிய முதலீடு செய்யலாமா? என்ற எண்ணம் மேலோங்கும்.

மகரம் : பிள்ளைச் செல்வங்களால் பெருமை வந்து சேரும் நாள். கொடுக்கல் மற்றும் வாங்கல்கள் ஒழுங்காகும்.விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் வாங்கி மகிழுவீர்கள். வீடு, இடம் விற்பதில் இருந்த தடுமாற்றங்கள் அகலும்.

கும்பம் :  ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும் நாள்.ஆற்றல்மிக்கவர்களின் சந்திப்பால் ஆனந்த மடைவீர்கள். தொழில் விருத்திக்கு வித்திடுவீர்கள். கல்யாண வாய்ப்புகள் கதவைத் தட்டும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

மீனம் : நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள்.யோசித்துப் பேசுவது நல்லது. வரவேண்டிய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படலாம். விரயங்கள் சற்று கூடுதலாக இருக்கும். சந்திராஷ்டமம் என்பதால் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. இறைவழிபாட்டில் கவனம் செலுத்துங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்