லைப் இஸ் வெறி ஷார்ட் நண்பா! மிரட்டலாக வெளியான மாஸ்டர் படத்தின் ஒரு குட்டி கத!
மாஸ்டர் திரைப்படத்தின் ஒரு குட்டி கத பாடல் வெளியானது.
தளபதி விஜய் பிகில் படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு போன்ற முக்கிய பிரபலங்கள் நடிக்கின்றனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடிக்கிறார். இப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வந்த நிலையில், இந்த திரைப்படத்தின் ஒரு குட்டி கத என தொடங்கும் பாடல், காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி மாலை 5 மணியளவில் வெளியாக உள்ளது என்றும், இந்த பாடலுக்கு நடிகர் விஜய் தான் குரல் கொடுக்கிறாரார் என்றும் அறிவிப்பு வெளியானது.
இதனையடுத்து, தளபதி விஜய் பாடியுள்ள ஒரு குட்டி கத பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.