அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழா ! குட்டி கெஜ்ரிவாலுக்கு அழைப்பு

மூன்றாவது முறையாக டெல்லி முதல்வராகப் பதவி ஏற்க உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க குட்டி கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப் பேரவைக்கான தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவில் ,மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி அதிகாரபூர்வமாக வெற்றி பெற்றது.பாஜக 8 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என அறிவிக்கப்பட்டது.எனவே ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைப்பது உறுதியானது.எனவே ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 16-ஆம் தேதி மூன்றாவது முறையாக டெல்லி முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.
Big Announcement:
Baby Mufflerman is invited to the swearing in ceremony of @ArvindKejriwal on 16th Feb.
Suit up Junior! pic.twitter.com/GRtbQiz0Is
— AAP (@AamAadmiParty) February 13, 2020
இந்நிலையில் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க குட்டி கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், ‘மினி மஃப்ளர் மேன்’ என்று அழைக்கப்படும் குழந்தைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பங்கேற்கும் விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த குழந்தையின் புகைப்படம் சமூக வலைதங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!
April 17, 2025
அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!
April 17, 2025
இபிஎஸ் பதில் தான் என்னோட பதில்! செய்தியாளர் கேட்ட கேள்விக்கு டென்ஷனான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!
April 17, 2025
வரலாறு காணாத உச்சம்! 71 -ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை!
April 17, 2025