துல்கரின் பிறந்தநாள் பரிசாக ஒரே நாளில் மூன்று படங்களின் போஸ்டர்கள் வெளியீடு..!
பிஜோய் நம்பியார் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் படம் ‘சோலோ’.ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம் என இருமொழிகளில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் க்ளிம்ஸ் வெளியிடும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
நேற்று துல்கரின் பிறந்தநாள் என்பதால் ‘சோலோ’ என்ற படத்துடன் சேர்த்து துல்கர் நடித்திருக்கும் மற்ற இரண்டு படங்களின் போஸ்டர்களும் நேற்று வெளியிடப்பட்டது. மலையாளத் திரைப்படங்களில் காமெடி ரோல்களில் நடிப்பவர் சௌபின் சாஹிர். இவர் இயக்கியிருக்கும் ‘பறவ’ நிறைய புதுமுகங்களின் நடிப்பில் உருவாகிவருகிறது. இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றம் ஒன்றில் துல்கரும் நடித்திருக்கிறார். துல்கரின் வித்தியாசமான கெட்டப்புடன் வெளியானது ‘பறவ’ படத்தின் போஸ்டர்.
மற்றொரு படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் ‘மகாநதி’யாகும். நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகிவருகிறது இந்தப் படம். கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாக நடிக்கும் இப்படத்தில் சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் துல்கர் சல்மான் ஜெமினி கணேசனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்தப் படத்தின் போஸ்டரும் “உள்ளது ஒரே பிறப்பென்றால்” என்ற டேக் லைனுடன் வெளியானது. பிரபலங்களில் வாழ்த்துகளுடன், ‘சோலோ’, ‘பறவ’, ‘மகாநதி’ படங்களின் போஸ்டர்களும் சேர்ந்து துல்கரின் இந்தப் பிறந்தநாளை இன்னும் ஸ்பெஷலாக்கியிருக்கிறது