திருமணம் முடிந்து சில நாட்களிலேயே பட பிடிப்பில் கலந்து கொண்ட யோகிபாபு! தனுஷின் அதிரடியான திருமண பரிசு!
யோகிபாபுவிற்கு, நடிகர் தனுஷ் அளித்த திருமண பரிசு.
நடிகர் யோகிபாபு தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. இவரது நடிப்பில் வெளியான அணைத்து படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. இவரது கை வசம் பல படங்கள் உள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, யோகிபாபு பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண நிகழ்வுக்கு யாரும் அளிக்கப்படாத நிலையில், இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி மார்ச் மாதம் சென்னையில் நடைபெறவுள்ளதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து, திருமணம் முடிந்த சில நாட்களிலேயே படப்பிடிப்பில் கலந்து கொண்ட யோகிபாபுவிற்கு, நடிகர் தனுஷ் தங்க செயினை திருமண பரிசாக வழங்கியுள்ளார்.