14 வயது அரசு பள்ளி மாணவியை… 6 நாட்கள் அடைத்து வைத்து…17 வயது செய்த காரியம்.!

Default Image

10ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆறு நாட்கள் வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த 17 வயது கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர்.

கும்பகோணம் அருகே உள்ளது அனைகரை  இங்கு செயல்படும் அரசு பள்ளி ஒன்றில் 10ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவியிடம், பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வரும் மாணவன் நட்பாக பழகி உள்ளான். இந்த நட்பைப் பயன்படுத்தி மாணவியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளான்.மாணவன் அழைத்ததை நம்பி சென்ற பள்ளி மாணவிக்கு காத்திருந்தது அதிர்ச்சி வீட்டிற்கு அழைத்து சென்று தொடர்ந்து ஆறு நாட்களாக அடைத்து வைத்து மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து உள்ளான் அந்த மாணவன்.

இந்நிலையில் பள்ளி சென்ற தனது மகள் காணமால் போனது  தொடர்பாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.இந்த புகார் தொடர்பாக விசாரித்த போலீசார் உண்மையை கண்டு பிடித்தனர். மாணவியை லாவகமாக தனது வீட்டிற்கு அழைத்து சென்ற கல்லூரி மாணவனை கையும் களவுமாக  கைது செய்த போலீசார் அம்மாணவரின் வீட்டில் இருந்து மாணவியை மீட்டனர்.

இது தொடர்பாக வெளியான தகவல் : மாணவரின் பெற்றோர் வெளிநாட்டில் இருக்கிறார்கள் இதனைப் பயன்படுத்தி  பள்ளி மாணவியை வீட்டிற்கு அழைத்து வந்து 6 நாட்களாக அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.இந்நிலையில்  ஒருபுறம் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார்கு இம்மாணவன் மீது சந்தேகம் வலுக்கவே அவர்களின் கையில் வசமாக சிக்கிய கல்லூரி மாணவனை அவன் வீட்டியிலேயே  வைத்து கைது செய்தனர் அவனிடம்   விசாரணை நடத்திய பின்  மாவட்ட நீதிமன்ற உத்தரவுப்படி தஞ்சை சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அக்கல்லூரி மாணவன் ஒப்படைக்கப்பட்டான்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்