காதலர் தினத்தில் வெளியாகிறது மாஸ்டர் படத்தின் ஒரு குட்டி கத!
தளபதி விஜயின் மாஸ்டர் படத்தின் மாஸ் அப்டேட்.
தளபதி விஜய் பிகில் படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு போன்ற முக்கிய பிரபலங்கள் நடிக்கின்றனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடிக்கிறார். இப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வந்த நிலையில் தற்போது இப்படம் குறித்த மாஸ் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் ஒரு குட்டி கத என தொடங்கும் பாடல், காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி மாலை 5 மணியளவில் வெளியாக உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.