இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது நியூசிலாந்து ! ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதனை

Default Image

இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. 

இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக சென்று உள்ளது.முதலில் நடைபெற்ற 5 டி20 போட்டிகள்கொண்ட தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது.இதன் பின்னர் தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது.முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 347 என்ற இமாலய இலக்கை இலக்காக நிர்ணையித்தது.ஆனால் இமாலய இலக்கையும் நியூசிலாந்து அணி எளிதாக வென்றது.இதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் பேட்டிங் தான்.டி -20 தொடரில் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில் ஒருநாள் தொடரில் அவர்கள் மீண்டு வந்து இந்திய அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்கள்.300 ரன்களுக்கு  மேல் என்ற கடின இலக்கை துரத்தும் போது பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று ஆடுவது சற்று கடினம் தான்.அந்த வகையில் நியூசிலாந்து அணி வீரர்கள் பங்களிப்பு அதிகம் இருந்தது.

அந்த அணியின் தொடக்க வீரர்கள் கௌவுரமான ரன்னை அடித்து கொடுக்க நடுவரிசை வீரர்களும் நிலைத்து நின்று ஆடினார்கள்.இதன் விளைவாக நியூசிலாந்து அணி 48.1 ஓவர்களில் 348 ரன்கள் அடித்து எளிதாக வெற்றி பெற்றது.இதன் பின்னர் 2-வது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.273 என்ற எளிமையான இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயம் செய்தது.ஆனால் இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சு இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை காலி செய்தது.பின் நடுவரிசை மற்றும் ஆல் ரவுண்டர்கள் போராடியும் இந்திய அணி  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 253 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வி அடைந்தது.மேலும் நியூசிலாந்து அணியிடம் தொடரையும் இழந்தது.தொடரை  2-0 என்ற கணக்கில் கைப்பற்றி டி-20 தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் கைப்பற்றியதற்கு பழி தீர்த்தது நியூசிலாந்து அணி. இதனையடுத்து 3-வது ஒருநாள் போட்டி இன்று  (பிப்ரவரி 11-ஆம் தேதி) டாருங்காவில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7  விக்கெட்டுகளை இழந்து 296 ரன்கள் அடித்துள்ளது.இந்திய அணியில் அதிகபட்சமாக ராகுல் 112 ரன்கள் , ஸ்ரேயாஸ்  62 ரன்கள் அடித்தனர்.இதன் பின்னர் 297 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன்  நியூசிலாந்து அணி களமிறங்கியது.தொடக்க வீரர்களாக களமிறங்கிய கப்தில் மற்றும் நிக்கோலஸ் பொறுப்புடன் அணி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.பின் கப்தில் 66 ரன்களில் வெளியேறினார்.இவர் போன சிறுது நேரத்தில் நிக்கோலஸ் 80 ரன்கள்,வில்லியம்சன் 22 ரன்கள்,டெய்லர் 12 ரன்கள் மற்றும் நீசம் 19 ரன்களில் வெளியேறினார்கள்.இறுதியாக டி கிராண்ட் ஹோம் மற்றும் டாம் நியூசிலாந்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.இறுதியாக நியூசிலாந்து அணி 47.1  ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் அடித்தது. களத்தில் டாம் 32 * ரன்கள் மற்றும் டி கிராண்ட் ஹோம்  58 * ரன்களுடன் களத்தில் இருந்தனர்.இந்திய அணியின் பந்துவீச்சில் சாகல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.இதன் மூலம் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது நியூசிலாந்து அணி.தொடரை  3-0 என்ற கணக்கில் கைப்பற்றி டி-20 தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் கைப்பற்றியதற்கு பழி தீர்த்தது நியூசிலாந்து அணி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்