துப்பாக்கியால் சுடச் சொன்னவர்களை துடைப்பத்தால் அடித்த டெல்லி மக்கள்.! பிரபல நடிகர் ட்விட்.!

Default Image

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் 62.59 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், இன்று காலை முதல் 22 வாக்கு மையங்களில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி 57 தொகுதிகளிலும், பாஜக 13 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் மற்றும் மற்ற காட்சிகள் இதுவரை ஒரு இடங்களில் கூட முன்னிலை பெறவில்லை என்பது குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் அரவிந்த் கெஜ்ரிவால் அரியணையில் அமருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, ஆம் ஆத்மி ஆட்சி சட்டமன்ற தேர்தலுக்கு ஆலோசகராக செயல்பட்ட பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவின் ஆன்மாவை காப்பாற்றிய டெல்லி மக்களுக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார். மேலும் டெல்லியில் 3-வது முறையாக ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும் நிலையில், பிரசாந்த் கிஷோர் இதுபோன்ற கருத்தை பதிவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து நடிகர் பிரகாஷ்ராஜ், அவரது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து கருத்து ஒன்று தெரிவித்துள்ளார். அதில் துப்பாக்கியால் சுடச் சொன்னவர்களை துடைப்பத்தால் அடித்த டெல்லி மக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்