தலைநகரை ஆளப்போவது யார்…துவங்கியது வாக்கு எண்ணிக்கை… 22 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தீவிரம்…
- டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் தேதி டெல்லி சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில், இன்று காலை 8 முதல் சுமார் 22 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
தலைநகர் டெல்லிக்கு சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு சிறப்பாக நடந்து முடிந்த நிலையில், இந்த வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி டெல்லி சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதில் 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் வரும் பிப்ரவரி மாதம் 22-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளது. நடந்து முடிந்த டெல்லி சட்டசபை தேர்தலில் 62.59% வாக்குகள் பதிவானது. இங்கு பதிவான வாக்குகள் 22 வாக்கு எண்ணும் மையங்களில் நடக்கிறது.
இந்த வாக்கு எண்ணிக்கையில் மதியத்திற்குள் முன்னணி நிலவரங்கள் தெரிய வரும். இந்த தேர்தலில், ஆளும் ஆம்ஆத்மி, காங்கிர்ஸ், பாஜக என மும்முனை போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், தலைநகர் டெல்லியில் இதுவரை வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் படி ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த தேர்தல் முடிவுகள் மூலம் யார் உண்மையில் வெற்றி பெறுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.