தாலி கட்டும் நேரத்தில் தலைமறைவாகிய மணப்பெண்!வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்ட மணமகன்!அதிர்ச்சி தகவல்!

தாலி கட்டும் நேரத்தில் தலைமறைவாகிய மணப்பெண்.அதிர்ச்சி அடைந்த மணமகனின் குடும்பத்தினர்.
கேரளாவில் உள்ள திருரான்கடி பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் இளம்பெண்ணுக்கும் சில நாட்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற இருந்துள்ளது.முகூர்த்த நேரம் நெருங்கிய நிலையில் மணப்பெண் மண்டபத்தில் இருந்து மாயமாகியுள்ளார்.
விசாரணையில் அவர் காதலனுடன் சென்றது தெரியவந்துள்ளது.இதனால் மணமகனின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மேலும் தங்களது குடும்ப மானம் போய்விடுமோ என்று கவலை அடைந்துள்ளனர்.
இதனை தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வேறொரு மணப்பெண்ணை தேடியுள்ளனர்.இதன் காரணமாக செருப்பரா பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை பார்த்துள்ளனர்.
அந்த பெண் ஒத்துக்கொண்ட நிலையில் அதே முகூர்த்த நேரத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.இதனால் மணமகனும் அவரின் குடும்பத்தினரும் நிம்மதி அடைந்துள்ளனர்.பின்னர் காதலனுடன் சென்ற அந்த பெண் காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
‘அந்த இடத்திற்கு செல்லாததால் தப்பிய தமிழர்கள் 68 பேர்’ – சுற்றுலா சென்ற மதுரை நபர் சொன்ன தகவல்.!
April 23, 2025
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025