வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே முழங்கையில் உள்ள கருமையான நிறத்தை மாற்றலாமா.?

Default Image

முழங்கையில் உள்ள கருமையான நிறத்தை மாற்றும் வழிமுறைகள் :

பலருக்கும் முழங்கைகள் முழங்கால்கள் அசிங்கமாக கருமையடைந்து காணப்படுவதுண்டு.ஏனெனில் பல இடங்களை அப்பகுதிகளை வைத்து ஊன்றி நடப்பதால் அதில் உள்ள செல்கள் இறந்து அப்பகுதி கருப்பாக தோற்றமளிக்கும்.

இதனை போக்க அடிக்கடி அழகு நிலையங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே சுலபமாக சரி செய்து விடலாம்.அதை பற்றி பின்வருமாறு காணலாம்.

  • அரை கப் தண்ணீரில் புதினா இலையை வைத்து கொதிக்க வைத்து பின்னர் அதில் எலுமிச்சை சாற்றை பிழிந்து அந்த நீரை அப்பகுதியில் தடவி 10-15 நிமிடம் வரை ஊற வைத்து பின்னர் குளிர்ந்த நீரில் அப்பகுதியை கழுவினால் இறந்த செல்கள் நீங்கிவிடும்.
  • பின்னர் புதிதாக செல்கள் வளரத்தொடங்கி அப்பகுதியும் வெள்ளையாக மாறும்.பேக்கிங் சோடாவை எடுத்து கொண்டு பால் கலந்து குளுகுவாக பேஸ்ட் போல செய்து அப்பகுதியில் தடவி சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.
  • இதனால் அப்பகுதியில் உள்ள கருமை மறைய தொடங்கும்.2 ஸ்பூன் தயிருடன் 2 ஸ்பூன் வினிகர் சேர்த்து கலந்து முழங்கையில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து காட்டன் கொண்டு துடைத்துவிட்டு பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
  • இவ்வாறு செய்வதால் கருமையான பகுதி வெள்ளையாக மாற தொடங்கும்.கடலை மாவுடன் தயிரை சேர்த்து குளுகுளு பேஸ்ட் போல செய்து அதை அப்பகுதியில் தடவி நன்கு உலர வைத்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
  • இல்லையெனில் கடலை மாவில் எலுமிச்சை சாற்றை கலந்து குளுகுளு பேஸ்ட் போல செய்து பயன்படுத்தலாம்.இவ்வாறு செய்வதால் அப்பகுதியில் உள்ள கருமை நிறம் முற்றிலும் மாறிவிடும்.
  • காற்றாலை ஜெல்லை தேனில் கலந்து முழங்கையில் தடவி 30 நிமிடங்கள் கழித்து நீரில் கழுவ வேண்டும் இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பயன் கிடைக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

rain news live
vetri,vaishnavi (1)
Thirumavalavan
Vetrimaaran
Red Alert rain
Weather Update in Tamilnadu
Vaibhav Suryavanshi father