மூன்று ஆஸ்கர் விருதுகளை தட்டி தூக்கியது 1917 திரைப்படம்.!

Default Image
  • 92-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருந்த 1917 திரைப்படம் மொத்தம் 3 விருதுகளை வென்றுள்ளது.

92-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்த ஆஸ்கர் விருது திரைத்துறையினருக்கான உயரிய கவுரமாக கருதப்படுகிறது. இந்த விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு திரை பிரபலங்கள் பங்கேற்றுள்ளன. இதில் சினிமா பிரபலங்கள் விதவிதமான உடையணிந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர். இந்த விழாவில் சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, சிறந்த இயக்குனர், இசையமைப்பாளர் போன்ற 24 பிரிவுகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இந்த ஆஸ்கர் விருதில் 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருந்த 1917 திரைப்படம் மொத்தம் 3 விருதுகளை வென்றுள்ளது.

அதில் சிறந்த சவுண்ட் மிக்ஸ், ஒளிப்பதிவு, விஷூவல் எஃபெக்ட்ஸ் ஆகிய பிரிவுகளில் இந்த திரைப்படம் விருதுகளை அள்ளி குவித்தது. சாம் மெண்டெஸ் இயக்கிய 1917 திரைப்படம், போர் எவ்வளவு கொடுமையானது என்பதையும், வழக்கமாக போர் என்றாலே வெறும் உயிரிழப்பு தொடர்பான விஷயம் மட்டுமல்ல என்பதனையும், அழுத்திச் சொன்னது இத்திரைப்படம். இதில் ராணுவ வீரரான சாம் மெண்டெஸின் தாத்தாவான ஆல்ஃபிரட் மெண்டிஸ் சொன்ன கதைகளின் ஒரு சிறுபகுதிதான் இந்த 1917.  இந்த நிலையில் மூன்று ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற 1917 படக்குழுவிற்கு உலகம் முழுவதும் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்