விஜய் நேரில் ஆஜராகுமாறு வருமான வரித்துறை சம்மன்! விஜய் எடுத்துள்ள அதிரடி முடிவு இதுதானாம்!
நடிகர் விஜய் வருமான வரித்துறையினரிடம் அவகாசம் கேட்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படப்பிடிப்பில் படு பிசியாக இருக்கும் தளபதி விஜயை, கடந்த 5-ம் தேதி வருமான வரித்துறையினர் அழைத்து வந்து, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து 24 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், அவரது வீட்டிலும் சோதனை மேற்கொண்ட நிலையில், எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை. மேலும், பிகில் பட தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ். கல்பாத்தி எஸ்.அகோரம் மற்றும் பைனான்சியர் அன்புசெழியன் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட 38 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
விஜய் வீட்டில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. ஆனால், மற்ற இடங்களில், நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்க்கு, வரி ஏய்ப்பு செய்தது உட்பட பல்வேறு ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர்.
இந்நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள், ஆவணங்கள் குறித்து விசாரிப்பதற்காக நடிகர் விஜய், எஸ்.அகோரம், சினிமா விநியோகஸ்தர் சுந்தர் ஆறுமுகம், அன்புசெழியன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி உள்ளது.
நடிகர் விஜய் மாஸ்டர் படப்பிடிப்பில் பிசியாக உள்ளதால், வருமான வரித்துறை முன் ஆஜாராவாரா என்ற கேள்வி குறி எழுந்த நிலையில், நடிகர் விஜய் வருமான வரித்துறையினரிடம் அவகாசம் கேட்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.