அமமுக ஒன்னும் அவர் வீட்டுவாசல காத்துக்கிடக்கல..விட்டு விளாசிய வெற்றிவேல்

Default Image

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் கூட்டுச் சேர்ந்தால் அவப்பெயர் ஏற்படும் என ரஜினிகாந்த் கருதுவதாக தமிழருவி மணியன் அளித்த பேட்டிக்கு அமமுக சேர்ந்த வெற்றிவேல் காரசாரமாக பதில் அளித்துள்ளார்.

ரஜினி அரசியல் குறித்து அறிவித்து ஒருவருடம் கழிந்த நிலையில் அதற்கான பணிகளில் நடைபெறுகிறதா.? என்று பலதரப்பில் இருந்து கேள்வி எழுப்பட்டது.மேலும் ரஜினி எப்பொழுது கட்சி துவங்க உள்ளார் என்றெல்லாம் அரசியல் மற்றும் அவருடைய ரசிகர்கள் உட்பட அனைவரும்  கேள்வி எழுப்பி வந்த நிலையில் ரஜினியின் அரசியல் குறித்து தெரிவித்து வரும் அவருடைய ஆலோசகராக கருதப்படும் தமிழருவி மணியன் அன்மையில் இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார்.

Image result for ரஜினி

அதில் ரஜினியின் அரசியல் பற்றி விரிவாக கூறியுள்ளார் அதில் வரும் ஏப்ரல் மாதம் ரஜினி கட்சியைத் தொடங்குகிறார், ஆகஸ்ட் மாதத்தில் பிரமாண்ட மாநாடு நடத்த திட்டமிட்டு பட்டுள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில்  தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ரஜினி இருப்பதாகவும் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் யாரோடு கூட்டணி கொள்வார் என்ற தகவலையும் தெரிவித்துள்ளார். 2014 ஆண்டு எவ்வாறு பாமக, தேமுதிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளை தேசிய ஜனநாயக கூட்டணிக்காக இணைத்தது போன்ற ஒரு வானவில் கூட்டணி ரஜினிக்காக உருவாக்கப்படும். பாஜகவுடன் ரஜினிகாந்த் கூட்டணி அமைப்பாரா? இல்லையா என்பது பற்றி  ரஜினியே முடிவெடுப்பார் அதே நேரத்தில் டிடிவி தினகரனுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்ற முடிவில் ரஜினிகாந்த் உறுதியாக இருக்கிறார் என்று அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

Image result for ரஜினி கார்

இந்நிலையில் அவருடைய இந்த பேட்டித் தொடர்பாக அமமுக செய்தி தொடர்பாளர் வெற்றிவேல் செய்திநிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ரஜினியின் அரசியல் குறித்து பேச தமிழருவி மணியனுக்கு என்ன அங்கீகாரம் உள்ளது.இவர் என்ன  ரஜினியின் செய்தி தொடர்பாளரா ? அவர் அமைக்கும் கூட்டணி தான் அமோக வெற்றி பெறபோகிறது என்று மொட்டையாக பேசி வருகிறார் அதைப்பறி பேசக் கூடாது.

Image result for வெற்றிவேல் அமமுக ரஜினி

ரஜினி கட்சி ஆரம்பிப்பது குறித்து  மட்டும் தான் அவர் பேச வேண்டும்.காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவரா? அல்லது காந்திக்கு இவர் என்ன பேரனா? தமிழருவி மணியன் நல்லவராக இருக்கலாம் ஆனால்  அதற்காக  எதுக்கெடுத்தாலும் கருத்து சொல்லக்கூடாது.ரஜினி கட்சி ஆரம்பித்தால் டிடிவி தினகரனுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை என்று இவர் எவ்வாறு  கூறலாம்? ரஜினியோடு  கூட்டணி வைக்க  அவர் வீட்டு வாசலில் நாங்கள் ஒன்னும்   காத்திருக்கவில்லை. கூட்டணி குறித்து ரஜினி தான்  முடிவு செய்ய வேண்டும். அல்லது அமமுக தலைமை  தான் முடிவு செய்யவேண்டும். இதற்கிடையில் இடைத்தரகர் தமிழருவிமணியன் பேசக்கூடாது என்று காட்டமாக தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்