வரலாற்றில் இன்று(10.02.2020)…ஜம்மு காஷ்மீரின் பிரதமராக இருந்த தமிழர் மறைந்த தினம் இன்று…

Default Image

ஜம்மு காஷ்மீர் சுதேசத்தின்  பிரதம அமைச்சராக இருந்து இந்திய அமைச்சராக உயர்ந்த ஒரு தமிழரின் வரலாறு இன்று உங்களுக்காக.. கோபாலசாமி அய்யங்கார்,தமிழ்நாட்டில் தஞ்சாவூரில்  மார்ச் மாதம் 31ம் நாள் பிறந்தார்.  பள்ளிக் கல்வி மற்றும்  கல்லூரிக் கல்வியில்  சட்டக் கல்வியையும்  சென்னையில் முடித்தார். பின் சிறிது காலம் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் உதவிப்பேரராசிரியராக பணிபுரிந்தார். பின்னர்இந்தியாவில்  562 இந்திய சுதேச சமஸ்தானங்களின் சார்பாக இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபைக்கு  தேர்ந்தெடுக்கப்பட்ட 93 உறுப்பினரகளில், ந. கோபாலசாமி அய்யங்காரும் ஒருவராவர்.

Image result for n. gopalaswami ayyangar

இவர்,  அம்பேத்கர்  தலைமையிலான அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழுவில் பணியாற்றியவர். இவர், அப்போதைய ஜம்மு&காஷ்மீர் நாட்டின்  பிரதம அமைச்சராக 1937 முதல் 1943 முடிய பணியாற்றினார். பின்னர் இந்திய அரசியலமப்பு நிர்ணய மன்றத்தின், அம்பேத்கர் தலைமையிலான அரசியலமைப்புச் சட்ட வரைவோலைக் குழுவில் பணியாற்றினார். இவர் காஷ்மீருக்கு அம்பேத்காரால் முடியாது என்று சொன்ன சிறப்பு அந்தஸ்த்தை இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370 கீழ் பெற்றுக் கொடுத்தவர் ஆவார். இத்தகைய இந்தியாவின் ஒற்றுமைக்கு அரும்பணியாற்றியைவர்  பிப்ரவரி மாதம் 10ம் நாள்1953ஆம் ஆண்டு இவ்வுலகத்தை விட்டு மறைந்தார். இவர் மறைந்த தினம் வரலாற்றில் இன்று.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்