சார்ஸை மிஞ்சிய கொரோனா.! 811 பேர் உயிரிழப்பு.! 37,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு.! தவிக்கும் சீனா.!

Default Image
  • சீனாவில் கொரோனா வைரசால் உயிரிழப்பின் எண்ணிக்கை 811-ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த 2002-2003-ம் ஆண்டு சார்ஸ் வைரஸ் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகளை விட கொரோனா மிஞ்சியிருக்கிறது.

சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பல நகரங்ககளில் பரவியுள்ளது. இதன் தாக்குதல் சுமார் 20 நாடுகளுக்கு மேல் பரவி உள்ளது. இதனால் உலக நாடுகள் முழுவதும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தப் புதியவகை வைரஸ், முதலில் வுஹான் நகரில் உயிரிழந்த 61 வயது முதியவரின் இறப்புக்கு காரணம் எனக் கடந்த ஜனவரி 10-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு காரணமாக அங்கிருந்த சந்தைப் பகுதியில், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவியிருக்கலாம் என்று கருதப்பட்டதால், விலங்குகள் ஏற்றுமதி, இறக்குமதிக்கு சீனா தடை விதித்தது.

இந்நிலையில், இந்த வைரசால் சீனாவில் நாளுக்கு நாள் இறப்புகள் அதிரிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில், நேற்று (சனிக்கிழமை) வரை உயிரிழப்பின் எண்ணிக்கை 811-ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்த வைரசால் 37,198 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரபூர்வமாக தகவல்கள் வெளியிட்டது. இதில் 2,656 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரத்தில் 89 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வந்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்பை முதலில் கண்டறிந்த மருத்துவரும் லீ இதனால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம், அரசு மீது சீன மக்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

சார்ஸை மிஞ்சிய கொரோனா.! 811 பேர் உயிரிழப்பு.! 37,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு.! தவிக்கும் சீனா.!

மேலும் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த சீனா 12க்கும் மேற்பட்ட நகரங்களுக்குச் செல்லவும், அங்கிருக்கும் மக்கள் வெளியேறவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 811-ஆக உயர்ந்திருக்கும் நிலையில், கடந்த 2002-2003-ம் ஆண்டு சார்ஸ் வைரஸ் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகளை விட கொரோனா மிஞ்சியிருக்கிறது. இந்த சார்ஸ் வைரஸ் பாதிப்பால் அப்போது உலக அளவில் 774 பேர் உயிரிழந்தனர் என குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்