மாஸ்டர் படப்பிடிப்பால் நெய்வேலி மக்களுக்கு கோடிக்கணக்கில் வருமானம்.! தொழிலாளர் சங்க தலைவர் கருத்து.!

Default Image

மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்து வருவதால் அங்கு உள்ள ஓட்டல்கள் மற்றும் லாட்ஜுகளில் நல்ல பிசினஸ் நடந்துகொண்டு இருக்கிறது. இதனால் அங்கு உள்ளவர்கள் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. பத்து நாட்கள் படப்பிடிப்பு நடந்தால் நெய்வேலி மக்களுக்கு கோடிக்கணக்கில் வருமானம் கிடைக்கும் என ஆர்.கே.செல்வமணி கருத்து தெரிவித்தார்.

சென்னை வடபழனியில் உள்ள தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன அலுவலகத்தில் அதன் தலைவரும், திரைப்பட இயக்குனருமான ஆர்.கே. செல்வமணி இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது விஜய் நடித்துவரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்று வரும் நிலையில் திடீரென நேற்று பாஜகவினர் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என போராட்டம் செய்தனர். இதுகுறித்து கருத்து கூறிய இயக்குனர் ஆர் கே செல்வமணி மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்து வருவதால் அங்கு உள்ள ஓட்டல்கள் மற்றும் லாட்ஜுகளில் நல்ல பிசினஸ் நடந்துகொண்டு இருக்கிறது. இதனால் அங்கு உள்ளவர்கள் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. பத்து நாட்கள் படப்பிடிப்பு நடந்தால் நெய்வேலி மக்களுக்கு கோடிக்கணக்கில் வருமானம் கிடைக்கும். அதை அரசியல் காரணங்களுக்காக தயவுசெய்து கெடுத்துவிட வேண்டாம்.

இதைத்தொடர்ந்து உச்ச நடிகர்களில், நடிகர் விஜய் மட்டுமே தமிழகத்தில் படப்பிடிப்பை நடத்துகிறார். சினிமாவை சினிமாவாக விட்டு விடுங்கள் அதை பெரிதுபடுத்தி பிரச்னை ஆக்கவேண்டும். ஜோசப் விஜய், இப்ராஹிம், செல்வமணி யார் வேண்டுமானாலும் தமிழ் திரைப்படத்துறையில் இருக்கலாம் என்றும், மற்ற மாநிலங்கள் திரைத்துறையை ஆதரிக்கும் நிலையில், தமிழ்நாட்டில் கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் திரைத்துறையை எதிரியாகப் பார்க்கிறார்கள். தமிழகத்தில் படப்பிடிப்பு நடக்கும்போது அரசியல்வாதிகள் படப்பிடிப்புக்கு இடையூறு செய்வதால்தான் படக்குழுவினர் பலர் வெளி மாநிலம், வெளி நாடுகளுக்கு செல்கிறார்கள். இதனால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய கோடிக்கணக்கான பணம் இழப்பு ஏற்படுகிறது. இதுபோன்று அந்த நிலைமையை உருவாக்க வேண்டாம் என்றும் ஆர்கே செல்வமணி வேண்டுகோள் விடுத்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்