தைப்பூச தினத்தில் 7 திரைகள் நீக்கி 6 காலங்கள் ஜோதி தரிசனத்தை காண குவிந்த ஏராளமான பக்தர்கள்.!

Default Image

கடலூர் மாவட்டம் வடலூரில் 149-வது தைப்பூச ஜோதி தரிசன விழா முன்னிட்டு வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் தைப்பூச தினத்தில் ஏழு திரைகள் நீக்கி 6 காலங்கள் ஜோதி தரிசனம் காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள மருதூர் என்ற கிராமத்தில் பிறந்தவர் வள்ளலார். இவர் கடவுள் ஒளி வடிவில் உள்ளார் என்பதை உணர்த்தும் வகையில் வடலூர் சத்திய ஞான சபையை வள்ளலார் நிறுவினார். இதைத்தொடர்ந்து ஏழை, எளிய மக்களின் பசியை போக்க சத்தியஞான சபை அருகிலேயே தர்மசாலையை தொடங்கி வைத்தார். அது அன்று முதல் இன்று வரை அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பின்னர் வள்ளலார் மேட்டுக்குப்பத்தில் சித்திபெற்றார். தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்தன்று தைப்பூச திருவிழாவாக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூச தினத்தில் ஏழு திரைகள் நீக்கி 6 காலங்கள் ஜோதி தரிசனம் காட்டப்படும்.

இந்நிலையில், நேற்று ஜோதி தரிசனம் கொடியேற்றத்துடன் ஆரம்பித்தது. அதைத்தொடந்து இன்று காலை முதல்கால ஜோதி தரிசனம் தொடங்கியது. அதில் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்பட்டது. அப்போது அதிகாலையிலேயே காத்திருந்த ஏராளமான பக்தர்கள், அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை என்ற மகா மந்திரத்தை முழங்கி ஜோதி தரிசனம் செய்தனர். பிற்பகல் 1 மணிக்கும் தொடர்ந்து இரவு 7 மணிக்கும், 10 மணிக்கும் ஜோதி தரிசனம் நடைபெறவுள்ளது. இதையடுத்து நாளை அதிகாலையில் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.

இந்த தை பூசத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஏரளமான பக்தர்கள், சித்தர்கள் கலந்துகொண்டு ஜோதி தரிசனம் செய்தனர். பின்னர் விழாவை முன்னிட்டு வடலூர் நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜோதி தரிசனத்தை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் டாஸ்மார்க் மற்றும் அசைவ கடைகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்