விஜய் விரும்பினால் வருமானவரித்துறை மீது வழக்கு..!சு.சுவாமி
நடிகர் விஜய், சினிமா பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் தயாரிப்பு நிறுவனம் ஏ.ஜி.எஸ் ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருந்தனர்.இதில் பைனான்சியர் அன்புசெழியனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டது என்றும் ரூ.300 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக வருமானவரித்துறை சார்பில் அறிக்கையாக தெரிவிக்கப்பட்டது.வருமான வரித்துறையால் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தளத்திலிந்து நடிகர் விஜய் – காரில் சென்னைக்கு அழைத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல் நடிகர் விஜய்க்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்றது. விஜயின் இல்லத்தில் மட்டும் விடியவிடிய சுமார் 23 மணி நேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் நடிகர் விஜய் மற்றும் அவருடியய மனைவி சங்கீதாவிடமும் வருமானவரித்துறை வாக்குமூலம் பெற்றதாகத் தகவல்கள் வெளியாகியது.
இந்நிலையில் நடிகர் விஜயிடம் வருமானவரித்துறையினரின் நடத்திய சோதனை குறித்து சென்னை விமானநிலையத்தில் பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமியிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஒன்றும் இல்லை என்றால் விஜய் எதற்காகப் பயப்பட வேண்டும். படப் பிடிப்பில் இருந்து அவரை வருமானவரித்துறை அதிகாரிகள்அழைத்து வந்தது அவருக்கு தவறாகத் தெரிந்தால் வழக்கறிஞர்களிடம் ஆலோசித்து வேண்டுமானால் வழக்குத் தொடரலாம் என்று தெரிவித்தார்.