இன்று(08.02.2020) முத்தமிழ் முருகனுக்கு தைப்பூசம்… கவலைகள் தீர கந்தனை சரணடையுங்கள்…

Default Image

வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரம், தை மாதம் பூசம் நட்சத்திரம், மாசி மாதம்  மகம் நட்சத்திரம் , பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரம் ஆகிய விழாக்கள் முத்தமிழ் கடவுளான நம் முருகனுக்குரியவை. இவைகள் எம்பெருமான் ஈசனுக்குரியவை. அதிலும்  குறிப்பாகத் தைப்பூசம் சிவ வழிபாட்டுக்கு மிகவும் உகந்த நாள் ஆகும்.

Image result for தைப்பூசம் அலகு குத்துதல்

ஆனாலும் தமிழர்கள் தமிழ்கடவுள் முருகன்பால் கொண்ட அன்பின் காரணமாக  இதை முருக வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொண்டதாக மாற்றினார்கள் பண்டைய தமிழர்கள். தந்தைக்கு பிரணவத்தை கற்றுக்கொடுத்த தகப்பன் சுவாமியான சுப்பிரமண்யனை தைப்பூசத்தன்று வழிபட்டால் சகல ஞானமும் கைகூடும் என்பது நம்பிக்கை. கொடிய பாம்பு தீண்டி இறந்துபோன பூம்பாவாயை உயிருடன்  எழுப்ப முருகனை நினைத்து ஒரு பதிகம் பாடி உயிருடன் மீட்டனர்.

Image result for தைப்பூசம்

ஞானசம்பந்தர் பூம்பாவையை உயிரோடு எழுப்பிய அற்புதமும் தைப்பூச நன்னாளில்தான் நடந்தது. பாடிய பதிகத்தில் தைப்பூசத்தைக் கொண்டாடும் சிறப்புகள் அந்தக் காலத்தில் இருந்ததை வெளிப்படுத்துகிறது. இதற்காக,  தைப்பூசத்தையொட்டி முருகன் குடிகொண்டிருக்கும் கோயில்களுக்குப் பாதயாத்திரை செல்வது வழக்கம். இவ்வாறு கால் நடையாக  காவடிகளும் வேல்குத்துதல், அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்களையும் பக்தர்கள் மனப்பூர்வமாக  செலுத்துவர். இதுபோன்ற வேண்டுதல்கள் செய்யாதவர்களும் இந்த நாளில் முருகன் ஆலயம் சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்யதால்  கல்வி, செல்வம், ஞானம் முதலிய சகல வரங்களையும் பெற்று வாழ்வில் வசந்தம் அடைவார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்