#Breaking: மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் பாஜகவினர் போராட்டம்.!

Default Image
  • நடிகர் விஜய் வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்த நிலையில் இன்று நெய்வேலியில் உள்ள மாஸ்டர் படப்பிடிப்பு  தளத்திற்கு சென்றார்.
  • மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்எல்சி 2-வது சுரங்கம் முன்னர் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களாக பிகில் படத்தின் வசூல் அடிப்படையில் போலி கணக்கு மூலம் வருமானத்தை குறைத்து வரி ஏய்ப்பு செய்தாக நடிகர் விஜய், AGS தயாரிப்பு நிறுவனம் மற்றும் சினிமா பைனான்சியர் அன்புசெழியன் ஆகியோருக்கு சொந்தமான 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். அதில் நடிகர் விஜய்யை மாஸ்டர் படப்பிடிப்பு தளத்திலிருந்து சென்னை அழைத்து வரப்பட்டு அவரது நீலாங்கரை, சாலிகிராமம் மற்றும் பனையூர் வீடுகளில் சுமார் 20 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது விஜயின் பிகில் பட சம்பளம் 30 கோடி என வருமான வரித்துறை தெரிவித்தது. இதைத்தவிர வேறு எந்த ஆவணங்களும், பணமும் விஜயிடம் இருந்து பறிமுதல் செய்யப்படவில்லை என தெரிவித்தது. பின்னர் வருமான வரித்துறை விசாரணை விஜயிடம் நேற்றுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில், நடிகர் விஜய் இன்று நெய்வேலியில் உள்ள மாஸ்டர் படப்பிடிப்பு  தளத்திற்கு சென்றார். அப்போது மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்எல்சி 2-வது சுரங்கம் முன்னர் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். என்எல்சி சுரங்கத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித்தது தவறு எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 1-ம் தேதி முதல் 10-ம் வரை படப்பிடிப்பு நடத்த என்எல்சி நிறுவனம் அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்