நீண்ட காலம் வாழ விரும்புகிறீர்களா? அப்ப இதெல்லாம் சாப்பிடாதீர்கள்!
- நீண்ட காலம் வாழ விரும்புகிறீர்களா?
- அப்ப இதெல்லாம் சாப்பிடாதீர்கள்.
நம்முடைய முன்னோர்கள் பல்லாண்டுகள் வாழ்ந்து சுகித்து இருந்தனர். ஏனென்றால், அவர்களது உணவு பழக்கவழக்கங்கள் பாரம்பரிய உணவுகளாகவும், சத்துள்ள உணவுகளாகவும் இருந்தது. ஆனால், இன்றைய தலைமுறையினர் விரும்பி உண்ணக் கூடிய உணவு மேலை நாட்டு உணவுகளாக உள்ளது. எனவே தான் இன்றைய தலைமுறையினரின் வாழ்நாள் மிகவும் குறைவாக உள்ளது.
இந்த பதிவில், நாம் நீண்ட நாள் வாழ்வதற்கு என்னென்ன உணவுகளை சாப்பிடக் கூடாது என்பது பற்றி பார்ப்போம்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
பதப்படுத்தப்பட்ட உணவுகள் நமது உடலுக்கு மிகவும் பெரிய அளவிலான ஆபத்துக்களை ஏற்படுத்துகிறது. அதிலும் மிகவும் கொடியது பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் தான். இதனை உண்ணும் போது நம்முடைய ஆயுசு நாட்கள் வெகு விரைவில் குறைந்து, விரைவில் மரநாதத்தை சந்திக்க நேரிடும்.
உருளைக்கிழங்கு சிப்ஸ்
இன்று சிறியவர்கள் முதல் பெருகியவர்கள் வரை அனைவருமே விரும்பி உண்ணக் கூடிய உணவுகளில் ஒன்று உருளைக்கிழங்கு சிப்ஸ். இந்த சிப்ஸை அதிகமாக சாப்பிடும் போது, இதில் பதப்படுத்துவதற்காக சேர்க்கப்படும் பொருட்கள், புற்றுநோயை ஏற்படுத்தக் கூடும்.
வறுத்த உணவுகள்
வறுத்த மற்றும் உப்பு அதிகம் நிறைந்துள்ள உணவுகளான சாசேஜ், பேகான், சலாமி போன்றவற்றில் உப்பு அதிகம் இருப்பதுடன், அதனை அதிகம் உண்ணும் போது, உடல் பருமனை அதிகரிப்பதுடன், உடலில் தேவையில்லாத வேறு சில பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். இதனால் நமக்கு ஆரோக்கிய கேடுகளை ஏற்படுத்தி ஆயுசு நாட்களை குறைத்து விடுகிறது.
டின்களில் அடைக்கப்பட்ட உணவுகள்
டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளை விரும்பி உண்ணும் போது, அதில் பதப்படுத்துவதற்காக சேர்க்கப்படும் கெமிக்கல் நமது உயிருக்கு ஆபத்துக்களை ஏற்படுத்தக் கூடிய நோய்களை ஏற்படுத்துகிறது.