கந்தனுக்கு அரோகரா..பழனியில் அழகனுக்கு திருக்கல்யாணம் இன்று..!வெகுசிறப்பாக நடைபெறுகிறது..!
- நாளை தைப்பூச திருவிழா அனைத்து முருகன் ஆலயங்களிலும் வெகுச்சிறப்பாக நடைபெற உள்ளது.
- இன்று பழனியில் பெரியநாயகியம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
படைவீடுகளில் 2 வது படை வீடாக திகலும் பழனியில் தைப்பூசத் திருவிழா பெரிய நாயகியம்மன் கோயில் கொடியேற்றத்தோடு கடந்த ஞாயிற்கிழமை தொடங்கியது. இவ்விழாவை முன்னிட்டு நாள்தோறும் வள்ளி, தேவசேனா சமேதராக முத்துக்குமாரசாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதைத் தொடா்ந்து ரத வீதி உலா எழுந்தருளளும் நிகழ்வும் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் வெள்ளிக்கிழமையான இன்று மாலை திருக்கல்யாணம் நடக்கிறது. அதன் பின்னர் வெள்ளித் தேரோட்டம் நடக்கவுள்ளது.
பிப். 8(நாளை) ஆம் தேதி தைப்பூச பெருவிழாவும் அதனைத் தொடர்ந்து தேரோட்டமும் நடைபெற உள்ளது.இவ்விழா ஏற்பாடுகளை பழனிக்கோயில் நிா்வாக அலுவலா் மற்றும் துணை ஆணையா், கண்காணிப்பாளா் ஆகியோர் செய்து வருகின்றனா்.