ஜிஸ்டி +ரூ.126 கோடி சம்பளம்,விஜயை விட அவர் அதிக சம்பளம் வாங்குகிறார் -சீமான் பேட்டி
விஜய்யை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகர் யாரென்று தெரியும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் .சினிமா பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் தயாரிப்பு நிறுவனம் ஏ.ஜி.எஸ் ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.அன்புசெழியனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டது என்றும் ரூ.300 கோடி வரி ஏய்ப்பு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.நடிகர் விஜய்க்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில்,விஜய்யை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகர் யாரென்று தெரியும்.அவர் ஒரு படத்திற்கு மட்டும், ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ.126 கோடியை ஒருவர் சம்பளமாக வாங்குகிறார்.அவர் வீட்டுக்கு ஏன் வருமான வரித்துறை அதிகாரிகள் செல்லவில்லை? என்று ரஜினியை குறிவைத்து மறைமுகமாக கேள்வி எழுப்பியுள்ளார்.