செருப்பை கழற்ற சொன்ன விவகாரம் : பல அமைச்சர்களும் இப்படித்தான் இருக்கிறார்கள்- மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இருக்கக்கூடிய பல அமைச்சர்களும் இப்படித்தான் இருக்கிறார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நீலகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றார். அந்த சமயத்தில் அங்கிருந்த சிறுவர்களை அமைச்சர் சீனிவாசன் , “டேய் ,வாடா வாடா செருப்பை கழற்றுடா,” என்று அழைத்தார்.உடனே இரண்டு பழங்குடியின சிறுவர்கள் வந்த நிலையில் ஒரு சிறுவன் அமைச்சரின் செருப்பை கழற்றிவிட்டான்.பின்னர் அமைச்சர் அருகில் இருந்த உதவியாளர் செருப்பை எடுத்து ஓரமாக வைத்தார்.அமைச்சருடன் நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.ஆனால் அமைச்சரின் இந்த செயல் பெரும் சர்ச்சையாக மாறியது.இதற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அளித்த விளக்கத்தில்,என் பேரனாகவே அந்த சிறுவனை கருதி செருப்பை கழட்டிவிடுமாறு கேட்டேன்.கழற்ற சொன்னதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று விளக்கம் அளித்தார்.
“பழங்குடியின மாணவரை அவமதித்த அமைச்சர் திண்டுக்கல் @Srinivasanoffl -ன் நடவடிக்கை – அரசியல் சாசன உறுதிமொழியை அத்துமீறும் போக்கின் உச்சக்கட்டம்”
-கழக தலைவர் @mkstalin அவர்கள் கண்டனம்.
Link: https://t.co/6f9HaEWLFS#admkantipplgovt pic.twitter.com/GfPcBCbqIb
— DMK (@arivalayam) February 6, 2020
இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்,முதுமலையில் பழங்குடி மாணவரை அழைத்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது காலணிகளை கழற்றிவிடச் சொல்கிறாரே…முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் கவனத்திற்கு இதனைக் கொண்டு வருகிறேன். அமைச்சர்கள் ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி இப்படி யாராக இருந்தாலும், அரசியல் சாசனத்தின் படி அவர்கள் எடுத்துக் கொண்ட உறுதிமொழியை மீறித்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதன் உச்சக்கட்டமாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் (பழங்குடியின மாணவரை அழைத்து தனது காலணிகளைக் கழற்றச் சொன்னது) இப்படிச் செய்திருக்கிறார். நாட்டுமக்கள் அனைவரும் இதனைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.