விசாரனையில் விஜய்.!“Waiting For Master Audio Launch” படக்குழு மாஸ் அறிவிப்பு
- வருமான வரித்துறையின் கிடுக்குப்பிடி விசாரணையில் நடிகர் விஜய்
- “Waiting For Master Audio Launch” என்று மாஸ்டர் படத்தின் எழுத்தாளர் ரத்னகுமார் அறிவித்துள்ளார்.
நடிகர் விஜய் .சினிமா பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் தயாரிப்பு நிறுவனம் ஏ.ஜி.எஸ் ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.அன்புசெழியனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டது என்றும் ரூ.300 கோடி வரி ஏய்ப்பு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.நடிகர் விஜய்க்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது சினி உலகமே பரபரப்பாக காணப்படுகிறது.
இவ்வாறு சோதனைகள் ஒரு புறம் நடந்தாலும் நடிகர் விஜய்க்கு பக்கபலமாக அவருடைய ரசிகர்கள் சமூகவலைதளங்களில் குரல் கொடுத்து வருகின்றனர்.இந்நிலையில் விஜய் தற்போது நடித்து வரும் மாஸ்டர் படத்தின் எழுத்தாளர் ரத்ன குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் “Waiting For Master Audio Launch” என்ற ட்வீட் செய்து மாஸ்டர் படத்தின் ஆடியோ லாஞ்ச் வெகுவிரைவில் என்று தெரிவித்துள்ளார்.எழுத்தாளரின் இந்த பதிவால் நடிகர் விஜய் ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியில் உள்ளனர்.
Waiting for #Master Audio Launch????????????????
— Rathna kumar (@MrRathna) February 6, 2020