ஹீரோவாக வாகனம் ஓட்ட இனிதே வரப்போகிறது ஹீரோ எலக்ட்ரிக் பைக்… கசிந்தது தகவல்கள்.. முரட்டுத் தோற்றத்தில் வண்டி…
- ஹீரோ பிரீமியம் ரக எலக்ட்ரிக் வாகனம் இந்தாண்டு வர இருக்கிறது.
- இது குறித்த சுவாரசியமான தகவல்கள் உங்களுக்காக.
ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் இதுவரை சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்திருக்கிறது. எனினும், ஹீரோ நிறுவனம் இதுவரை என்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. ஆனால், ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் குறித்த படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் இந்த 2020 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்சமயம் வெளியாகி இருக்கும் புகைப்படங்களின் படி இந்த ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய மோட்டார்சைக்கிள் பிரீமியம் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்கி களக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய எலெக்ட்ரிக் AE 47 மோட்டார்சைக்கிள் 150 முதல் 200 சிசி பிரிவு வாகன வரிசையில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் கூறப்படுகிறது. இதன் வடிவமைப்பை பொருத்தவரை இந்த புதிய மோட்டார்சைக்கிள் கம்பீரமான தோற்றம் பெற்றிருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது. இதன் சிறப்பம்சங்களான,
- முன்புறம் அப்சைட்-டவுன் ஃபோர்க் வழங்கப்படுகிறது.
- இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.
- இதன் பவர்டிரெயின் மற்றும்
- பேட்டரி பேக் பற்றி இதுவரை எந்த தகவலும் கிடைக்க வில்லை.
- இது மணிக்கு அதிகபட்சமாக 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கும் என்றும்
- இதனை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 120 கிலோமீட்டர் வரை தொடர்ந்து பயணிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.
- மேலும் இதில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் மற்றும்
- ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி போன்ற வசதிகளும் வழங்கப்படலாம் என்ற தகவலும் பரவிவருகிறது.
- இதன் விலை 1.25 – 1.50 இலட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.