#Breaking: பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் ரூ.65 கோடி பறிமுதல்.?
- சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான வீடு, அலுவலங்கங்களில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் ரூ.65 கோடி பறிமுதல் செய்ததாக தகவல் வந்துள்ளது.
- நேற்றிலிருந்து நடிகர் விஜயின் வீடு, AGS நிறுவனத்துக்கு சொந்தமான 25க்கும் மேற்பட்ட இடங்களும் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் போன்றவர்களை வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான வீடு, அலுவலங்கங்களில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் ரூ.65 கோடி பறிமுதல் செய்ததாக தகவல் வந்துள்ளது. இந்த நிலையில் நேற்றிலிருந்து நடிகர் விஜயின் வீடு, AGS நிறுவனத்துக்கு சொந்தமான 25க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் பிகில் படத்துக்கு பைனான்ஸ் உதவி கொடுத்ததாக கூறும், சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரிடம் தொடர்ந்து இரண்டு நாட்களாக வருமான வரு சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில். சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான சென்னையில் இருக்கும் வீட்டில் ரூ.50 கோடியும், மதுரையில் இருக்கும் வீட்டில் ரூ.15 கோடியும் பறிமுதல் செய்ததாக தகவல் கூறப்படுகிறது. பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன். இவர் மதுரையை பூர்விகமாக கொண்டவர். அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தங்கமகன், வெள்ளைக்காரதுரை, மருது, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களைத் தயாரித்திருக்கிறார். இந்நிலையில் வரி ஏய்ப்பு தொடர்பான புகாரின் பேரில் சென்னை தி. நகரில் உள்ள அன்புச்செழியன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர் என குறிப்பிடப்படுகிறது.