நீரிழிவு நோயால் கஷ்டப்படுறீங்களா? காலையில் இதை மட்டும் பண்ணுங்க!
- நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய முறைகள்.
- அருந்த வேண்டிய ஜூஸ்கள்.
இன்று நாகரீகம் என்கின்ற பெயரில் நமக்கு நாமே பல ஆரோக்கிய கேடுகளை தேடிக் கொள்கிறோம். இதனால், முதிர் வயதில் வரக் கூடிய நோய்கள் எல்லாம், இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு கூட வந்து விடுகிறது. நம்முடைய முன்னோர்கள் பல ஆண்டு காலம் வாழ்ந்து சுகித்திருந்த நிலையில், அவர்களது ஆயுசு நாட்களில் பாதியளவு கூட நம்மால் வாழ முடிவதில்லை.
இன்று பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவரும் நீரிழிவு என்னும் நோயால் பாதிக்கப்படுகின்றன. இதற்கு காரணம், நம்முடைய தமிழ் கலாச்சார உணவு முறைகளை மறந்து, மேலை நாட்டு உணவுகளை தான் விரும்பி சாப்பிடுகிறோம். நம்முடைய உணவு முறைகள் இவ்வாறு மாறுவது தான் நம்முடைய உடல் ஆரோக்கியம் கெட்டு போவதற்கு காரணம்.
தற்போது இந்த பதிவில், நீரிழிவு நோயில் இருந்து நாம் குணமடைய என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
பாகற்காய் ஜூஸ்
நம்மில் பலரும் விதவிதமான, உடலுக்கு கேடு விளைவிக்க கூடிய ஜூஸ்களை விரும்பி குடிப்பதுண்டு. அவைகளை தவிர்த்து நாம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் மூடிய ஜூஸ்களை விரும்பி குடிப்பது நல்லது.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் காலையில், எழுந்தவுடன் பாகற்காய் ஜூஸை குடித்து வந்தால் நீரிழிவு நோயில் இருந்து விடுதலை பெறலாம்.
வெந்தய கீரை
நீரிழிவு நோய் பிரச்சனை உள்ளவர்கள், அடிக்கடி வெந்தய கீரை சமைத்து சாப்பிட்டு வந்தால், இந்த நோயின் தாக்கத்திலிருந்து விடுதலை பெறலாம்.
வெண்டைக்காய்
நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் காலையில் எழுந்தவுடன், தேநீரை நாடுவதை விட்டுவிட்டு, வெண்டைகாயை இரண்டாக கீறி நீரில் ஊறவைத்து அதிகாலையிலேயே குடித்து வந்தால், நீரிழிவு பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.