#WeStandWithVIJAY ட்விட்டரில் முதலிடத்தில் ட்ரெண்டிங் அதிரடி காட்டும் ரசிகர்கள்
மாஸ்டர் படத்திற்கான படப்பிடிப்பு நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் கடந்த 3-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், மூன்றாம் நாளான இன்று படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது. திடீரென இன்று மதியம் படப்பிடிப்பு தளத்திற்கு பாதுகாப்பு படைவீரர்களுடன் உள்ளே நுழைந்த வருமான வரித்துறை அதிகாரிகள் விஜயை தனியே அழைத்து சம்மன் அளித்து, சிறிது நேரம் விசாரணை நடத்தினர்.
It’s time to counter the fake propaganda being spread against our Thalapathy. Start tweeting with the above tag! #Master
— Vijay Fans Trends (@VijayFansTrends) February 5, 2020
பிகில் திரைப்படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக அந்த நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்பு செழியன் தொடர்புள்ள இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். பிகில் படத்துக்கு சம்பளம் வாங்கியது தொடர்பாக விஜயிடமும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
அன்றும், இன்றும், என்றும் #WeStandWithVIJAY @actorvijay ????????❤️????
— Sonia Arunkumar (@rajakumaari) February 5, 2020
சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் நீலாங்கரையில் உள்ள விஜயின் மற்றோரு வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
Being Vijay Is Not Easy. All bcoz of his Enormous Growth..! #WeStandWithVIJAY..Thalaivaaaaaaaa @actorvijay.. #Master..❤️????
— × Kettavan Memes × (@Kettavan__Memes) February 5, 2020
இந்நிலையில் விஜய்க்கு ஆதரவாக ட்விட்டரில் #WeStandWithVIJAY என்ற ஹாஷ்டாக் இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்டாகி வருகிறது .இந்த ஹாஷ்டாக் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது .