மக்களின் மனம் கவர்ந்த மகேந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தியது தனது புதிய எலக்ட்ரிக் காரை… சிறப்பு தகவல்கள் உங்களுக்காக…
- மாசில்லா இந்தியாவிற்காக வர இருக்கிறது புதிய எலக்ட்ரிக் கார்.
- அறிமுகப்படுத்தியது மகேந்திரா நிறுவனம்.
வாகன கண்காட்சி 2020ல் சந்தைக்கு வந்துள்ள புதிய மஹிந்திரா XUV 300 எலக்ட்ரிக் கார் இந்தாண்டு 2021 ஆம் ஆண்டில் விற்பனைக்கு இரண்டு விதமான வடிவில் வரவுள்ளது. ஏற்கனவே, சமீபத்தில் விற்பனைக்கு வந்த நெக்ஸான் இவி, ZS EV காருக்கும் இது கடும் சவாலினை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த எலெக்ட்ரிக் எக்ஸ்யூவி 300 காரில் 350V மற்றும் கூடுதலான மிசாரத்தை வழங்கும் 380V என இரண்டு விதமான வடிவில் கிடைக்க உள்ளது. இதில், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளையும் பெற உள்ள எலெக்ட்ரிக் இஎக்ஸ்யூவி அதிகபட்சமாக 300 கிமீ முதல் 400 கிமீ வரையிலான தொலைவினை பெறும் வகையில் இதன் பேட்டரி திறன் அமைந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் காம்பேக்ட் எஸ்யூவி காருக்கான பேட்டரி செல்களை எல்ஜி கெம் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு ஆக விளங்கும். கொரியவின் பேட்டரி உற்பத்தியாளரான எல்ஜி இந்தியா சந்தையின் பயன்பாடுகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட எடை குறைவான லித்தியம் அயன் பேட்டரியை மஹிந்திரா நிறுவனத்துக்கு என பிரத்தியேகமாக தயாரித்து வழங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.