வரலாற்றில் இன்று(07.02.2020)…மொழி ஞாயிறு தேவநேய பாவணார் பிறந்த தினம் இன்று…

Default Image
  • தமிழ் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றிய தமிழறிஞர் பிறந்த தினம் இன்று.
  • இவரது பிறந்த நாளில் இவரது அரும்பணியை நினைவு கூறுவோம்.

பிறப்பு:

தேவநேய பாவாணர் 1902 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் நாள் வெள்ளிக்கிழமை ஞானமுத்து-பரிபூரணம் அம்மையார்  தம்பதியருக்கு   திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தார்.

கல்வி:

தன்  ஐந்தாம் அகவையில் பெற்றோரை இழந்தப் பாவாணர், சோழபுரம் விடையூழியப் பள்ளியில் தொடக்கக் கல்வியும், ஆம்பூரில் உள்ள மிசௌரி லூத்தரன் விடையூழிய நடுநிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு வரை படிப்பைத் தொடர்ந்தார். பின், பாளையங்கோட்டைத் திருச்சபை விடையூழியக் கழக உயர்நிலைப்பள்ளியில் பயின்றார்.

ஆசிரியர் பணி:

இவர், தன் 17ம் அகவையில், 1919 ஆண்டு தாம் பயின்ற சீயோன் மலை உயர்தரப்பள்ளியிலேயே ஆறாம் வகுப்பு ஆசிரியராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். அதன் பின், 1921ம் ஆண்டு,  ஆம்பூர் உயர்நிலைப்பள்ளியில் உதவித் தமிழாசிரியராகப் பணிவுயர்வு பெற்றார். பின், 1924ம் ஆண்டு மதுரைத் தமிழ்ச்சங்கப் பண்டிதத்தேர்வில்  தேர்ச்சி பெற்ற ஒரேயொருவர் தேவநேயர் என்ற சிறப்பும் பெற்றார்.’

இவரின் சிறப்பு:

மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமான இவர், சுமார்  40க்கும் மேலான மொழிகளின் சொல் இயல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல் ஆராய்ச்சிகள் செய்துள்ளார். இவர், தமிழறிஞர் மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து தமிழ் வளர்ச்சி அடைய  உழைத்தார்.  இவருடைய ஒப்பற்ற  தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கண்ட  பெருஞ்சித்திரனாரால் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் என்று பெயர் சூட்டினார்.இவர்,  திராவிடத்திற்குத் தாயாகவும் ஆரியத்திற்கு மூலமாகவும் விளங்கிய மொழி தமிழென வாதிட்டவர். கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம் உள்ளிட்டவைகளுக்குத் தன் சொற்கள் பலவற்றை அளித்தது என்று நிறுவியவர் பாவாணர் ஆவார். தமிழின் வேர்ச்சொல் வளத்தையும் செழுமையையும் சுட்டிக்காட்டி, அதன் வளர்ச்சிக்கான வழியையும் அவரின் நூல்களின் வழி உலகிற்கு எடுத்த கூறினார். இத்தகைய தமிழ் பணிக்கு அரும்பாடு பட்ட இவர் பிறந்த தினம் வரலாற்றில் இன்று.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்