வலியால் துடித்த பாகிஸ்தான் வீரர்..! “ஆர் யு ஓகே” என கேட்ட இந்திய வீரர்.!

Default Image
  • இப்போட்டியில் நான்காவது ஒருவரையும் சுஷாந்த் மிஸ்ரா வீசினார். அப்போது அவர் வீசிய பவுன்சர் பந்து பாகிஸ்தான் வீரர் தொடக்க வீரர் ஹைதர்அலி தோள்பட்டையில் அடித்தது.
  • வலி தாங்க முடியாமல் ஹைதர்அலி மைதானத்தில் உட்கார்ந்தார் .அப்போது  சுஷாந்த் மிஸ்ரா அருகில் சென்று நன்றாக இருக்கிறீர்களா..? என நலம் விசாரித்தார்.

தென் ஆப்ரிக்காவில் 19 வயது உட்பட்டவர்களுக்கான உலக கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற செமி-பைனல் போட்டியில் பாகிஸ்தான் , இந்தியா மோதியது. இப்போட்டியில் இரண்டாவது ஓவரை இந்திய பந்துவீச்சாளர் சுஷாந்த் மிஸ்ரா வீசினார்.

அப்போது முஹம்மது ஹுரைரா 4 ரன்னில் விக்கெட்டை பறித்தார். இதைதொடர்ந்து நான்காவது ஒருவரையும் சுஷாந்த் மிஸ்ரா வீசினார். அப்போது அவர் வீசிய பவுன்சர் பந்து பாகிஸ்தான் வீரர் தொடக்க வீரர் ஹைதர்அலி தோள்பட்டையில் அடித்தது.

இதனால் வலி தாங்க முடியாமல் ஹைதர்அலி மைதானத்தில் உட்கார்ந்து கொண்டார். அப்போது  ஹைதர்அலி அருகில் சென்ற சுஷாந்த் மிஸ்ரா நன்றாக இருக்கிறீர்களா..? என நலம் விசாரித்துள்ளார். இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. மேலும் எதிரணி வீரரை விசாரித்த  இந்திய வீரர் சுஷாந்த் மிஸ்ராவை  பாகிஸ்தான் ரசிகர்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இப்போட்டி  போட்செஃப்ஸ்ட்ரூமில் உள்ள  சென்வெஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் இறங்கிய பாகிஸ்தான் அணி 43.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 172 ரன்கள் மட்டுமே அடித்தனர்.

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யஷ்வி ஜெய்ஸ்வால் , திவ்யான்ஷ் இருவரும் இறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் விளாசினார். சிறப்பாக விளையாடிய யஷ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசினார்.

தொடக்க வீரர்கள் இருவரும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 35.2 ஓவரில் 176 ரன்கள் அடித்தனர்.இதனால் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நேரடியாக பைனலுக்கு சென்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்