ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை : வழக்கை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்

Default Image
  • ராதாபுரம் தொகுதியில்  கடைசி மூன்று சுற்று வாக்குகளையும், தபால் வாக்குகளை மட்டும் எண்ண சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்தது.
  • தேர்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கின் விசாரணையை பிப்ரவரி 25-ஆம் தேதிக்கு  உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 

அதிமுக வேட்பாளர் இன்பதுரை 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற  தேர்தலில் பெற்ற வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அவரது  வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம்,கடைசி மூன்று சுற்று வாக்குகளையும், தபால் வாக்குகளை மட்டும் எண்ண உத்தரவு பிறப்பித்தது.இந்த உத்தரவுக்கு எதிராக அதிமுகவின் இன்பதுரை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் பலமுறை விசாரணைக்கு வந்தது.ஆனால் டிசம்பர் 11ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்றும் தெரிவித்தது.பின்னர மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும்  வழக்கின் விசாரணையை  ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.இந்நிலையில் நேற்று  மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கின் விசாரணையை 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்