இன்று உலக புற்றுநோய் தினம்!
- இன்று உலக புற்றுநோய் தினம்.
- புற்றுநோயின் வகைகள் மற்றும் அறிகுறிகள்.
நம் உடல் பலவகையான உயிரணுக்களால் ஆனது. உடல் வளர, ஆரோக்கியமாக இருக்க, இந்த உயிரணுக்கள் வளர்ந்து பெருகி, மேலும் பல உயிரணுக்களை உருவாக்குகின்றன. இந்தச் சீரான பணியில் ஏதேனும் தவறு ஏற்படும்போது, புதிய உயிரணுக்கள் அதிகமாக உருவாகிவிடுகின்றன. பழைய உயிரணுக்கள் அவற்றின் கால அளவை மீறி உயிர் வாழ்ந்துவிடுகின்றன. இந்த அதிகப்படியான உயிரணுக்கள் உடலில் கட்டியாகத் தோன்றுகின்றன. எல்லா கட்டிகளையும் புற்றுநோய் கட்டிகள் முடியாது.
புற்றுநோய் உயிர் கொல்லி நோய்களில் ஒன்றாக திகழ்கிறது. இதற்க்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், இந்த நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக தான் உள்ளது. இந்த சிகிச்சையை மேற்கொள்ள பெரிய அளவில் செலவுகள் ஏற்படுவதால், பாமர மக்கள் இந்த நோயால் அதிக அளவில் இறக்கின்றனர். 2018 ம் ஆண்டில் மட்டும் இந்த நோயால் 9.6 மில்லியன் மக்கள் இறந்துள்ளனர். கிட்டத்தட்ட உலக அளவில் 6-ல் 1 பேர் இறக்கின்றனர். மேலும், ஒவ்வொரு வருடமும் 11 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். 25 லட்சம் பேர் தற்போது புற்றுநோய் பாதித்து உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இன்று பெண்களை பாதிக்க கூடிய புற்றுநோய் தான், மார்பக புற்று நோய். மேலும், ஆண்களை பொறுத்தவரையில், புகைப்பிடித்தல், புகையிலை பழக்கத்தால் மட்டும் தோராயமாக 22 சதவீதம் ஆண்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். புற்றுநோயை பொறுத்தவரையில், 5 வகையான புற்றுநோய்கள் உள்ளன. அவை, தோல் புற்று நோய், மார்பக புற்று நோய், நுரையீரல் புற்றுநோய், கருப்பை புற்று நோய் மற்றும் தைராயிடு புற்றுநோய் ஆகும்.
இந்த நோயின் துவக்கத்திலேயே அதனை கவனித்து, சரியான சிகிச்சை பெற வேண்டும். பொதுவாக இந்த நோய் வந்துவிட்டாலே அவர்கள் இறந்து விடுவார்கள் என்ற எண்ணம் தான் காணப்படுகிறது. ஆனால், புற்று கட்டிகளை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றினால் மீண்டும் தோன்றுவதில்லை; அவை உடலின் மற்ற பாகங்களுக்குப் பரவுவதில்லை.