யோகி பாபுவுக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு! பிரபல இயக்குனர் விளக்கம்!
- யோகி பாபுவுக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு.
- விளக்கமளித்த இயக்குனர்.
நகைசுவை நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் உருவாகி வரும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இவர் கைவசம் பல படங்கள் உள்ளது.
இந்நிலையில், இவர் தற்போது இயக்குனர் முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் காக்டெய்ல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் யோகி பாபு முருகன் வேடத்தில் உள்ளார்.
இதனையடுத்து, கடவுள் முருகனை தவறாக சித்தரித்து மத உணர்வை புண்படுத்தியதாக கூறி சிலர் பிரச்சனைகளை எழுப்பி வருகின்றனர். இதற்க்கு விளக்கமளித்த இயக்குனர் முருகன் யாரையும் புண்படுத்தவில்லை என கூறியுள்ளார்.