செம்பருத்தி சீரியல் இயக்குனர் கைது! காரணம் இதுதானா?
- செம்பருத்தி சீரியல் இயக்குனர் கைது.
- 10-க்கும் மேற்பட்ட துணை நடிகைகள் திருவேற்காடு காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.
இன்று மக்கள் பலரும் சீரியலுக்கு அடிமையாகி உள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். அந்தவகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலை மக்கள் பலரும் விரும்பி பார்ப்பதுண்டு.
இந்நிலையில் செம்பருத்தி சீரியலின் படப்பிடிப்பின் போது, இந்நாடகத்தின் இயக்குனர் நிராவி பாண்டியன் ஆபாசமாக பேசியதாக 10-க்கும் மேற்பட்ட துணை நடிகைகள் திருவேற்காடு காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இதனையடுத்து இந்த சீரியலின் இயக்குனரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.