#Breaking:சீனா சென்ற வெளிநாட்டினர் இந்தியா வர தடை.!
- நேற்று முன்தினம் சீன நாட்டினர் இ-விசாக்கள் மூலம் இந்தியாவிற்கு பயணம் செய்ய இந்திய தூதரகம் அறிவித்தது.
- இன்று கொரோனா வைரசால் பாதிப்பிற்குள்ளான சீனாவுக்கு சென்ற வெளிநாட்டினர் இந்தியா வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா வைரசால் பாதிப்பிற்குள்ளான சீனாவுக்கு சென்ற வெளிநாட்டினர் இந்தியா வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2 வாரங்களில் சீனா சென்ற வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியா வர மத்திய அரசு தடை விதித்து உள்ளது.
நேற்று முன்தினம் சீன நாட்டினர் இ-விசாக்கள் மூலம் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொரோனா வைரஸ் பெய்ஜிங் , ஷாங்காய் ,ஹூபே போன்ற பல நகரங்களில் பரவியதால் பலியானோர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து கொண்டு வருகிறது.
இந்த கொரோனா வைரஸ் தாக்கியதில் இதுவரை சீனாவில் மட்டும் பலியானவர்களின் எண்ணிக்கை 425 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல இந்த வைரசால் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதாக சீனா அரசு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. சீனாவை தவிர பிலிப்பைன்சிலும் , ஹாங்காங்கிலும் இரண்டு பேர் இறந்து உள்ளனர்.