வரலாற்றில் இன்று – கியூபா அதிபர் பதவியிலிருந்து ஃபிடல் காஸ்ட்ரோ ராஜினாமா செய்தார்…!!
பிப்ரவரி 24, 2008 — வரலாற்றில் இன்று – கியூபா அதிபர் பதவியிலிருந்து ஃபிடல் காஸ்ட்ரோ ராஜினாமா செய்தார். பிடரல் காஸ்ட்ரோ. 1959 ல் கியூபா அதிபராக பதவியேற்றார். அண்டை நாடான அமெரிக்காவின் உருட்டல் மிரட்டல் நடவடிக்கைகளை வெற்றிகரமாக எதிர்த்து நின்று ஆட்சி செய்து க்யூபா மக்களின் அன்பையும் ஆதரவினையும் பெற்றார். உலக நாடுகளின் பாராட்டுதல்களையும் பெற்றார். சோவியத் யூனியன் முதல் பல சோஷலிச நாடுகளில் கம்யூனிசம் தோல்வியடைந்த பின்னரும்கூட கம்யூனிசக் கொள்கைகளை வெற்றிகரமாக க்யூபாவில் தூக்கிப் பிடித்தவர் காஸ்ட்ரோ ! இதுபோல் 49 ஆண்டுகள் திறம்பட பணியாற்றினார். வயது மூப்பு காரணமாக தனது 76ம் வயதில் தானே முன்வந்து பதவி விலகினார் (VRS ) அவரது இளைய சகோதரர் ராவுல் காஸ்ட்ரோ பொறுப்பு அதிபராக பதவியேற்றார்