அருங்காட்சியகம் என்ற அறிவிப்பு தமிழர்களுக்கு பெருமை -அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
தூத்துக்குடி மாவட்டத்தில் தொல்லியல் சிறப்பு மிக்க தமிழகத்தின் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில்,அருங்காட்சியகம் என்ற அறிவிப்பு தமிழர்களுக்கு பெருமையை ஏற்படுத்தியுள்ளது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூரில் கி.மு 1600 க்கு முற்பட்ட நாகரிகத்தோடு தொடர்புடையது. தொல்லியல் துறையால் அகழ்வாய்வு செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்டு வரும் ஊர்களில் முதன்மையானதாக உள்ளது. எனவே நேற்று 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.அப்பொழுது அவரது உரையில்,தூத்துக்குடி மாவட்டத்தில் தொல்லியல் சிறப்பு மிக்க தமிழகத்தின் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இது குறித்து தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறுகையில்,பட்ஜெட்டின் போது ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் என்ற அறிவிப்பு தமிழர்களுக்கு பெருமையை ஏற்படுத்தியுள்ளது. பட்ஜெட்டில் அறிவித்த தொல்லியல் பல்கலைக்கழகத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்.கீழடியில் அமையவுள்ள அருங்காட்சியகத்திற்கு இந்த வாரம் அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் பழனிசாமி. பட்ஜெட் தாக்கலின் போது சரஸ்வதி சிந்து என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதில் தவறில்லை என்றும் தெரிவித்துள்ளார்.