சச்சின், காம்பீர் மற்றும் தன்னை எப்படி நடத்தினாரோ அதேபோல் நடத்தக் கூடாது.! தோனியை விமர்சித்த சேவாக்.!
- இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் விரேந்திர ஷேவாக், சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், ரிஷப் பண்ட் இந்திய அணியில் இருந்து தற்போது தவிர்த்து வருவதை விமர்சித்துள்ளார்.
- அத்துடன், சச்சின், காம்பீர் மற்றும் தன்னை தோனி எப்படி நடத்தினாரோ அதேபோல் நடத்தக் கூடாது என்றும் சேவாக் வெளிப்படையாக பேசியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் விரேந்திர ஷேவாக், சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், ரிஷப் பண்ட் இந்திய அணியில் இருந்து தற்போது தவிர்த்து வருவதை விமர்சித்துள்ளார். தொடர்ந்து ரிஷப் பண்ட் சொதப்பி வரும் நிலையில், அவருக்கு பதிலாக தற்போது கே.எல். ராகுல் விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார். இந்த நிலையில், ரிஷப்புக்கு வாய்ப்பு கொடுத்தால்தான் அவரின் திறமை தெரியவரும் என்றும், அவரது நிலை குறித்து அணி நிர்வாகம் தெளிவுபடுத்தவில்லை என்றால் அது தவறானது எனக் தெரிவித்தார். அத்துடன், சச்சின், காம்பீர் மற்றும் தன்னை தோனி எப்படி நடத்தினாரோ அதேபோல் நடத்தக் கூடாது என்றும் சேவாக் வெளிப்படையாக பேசியுள்ளார்.
மேலும், எங்களுடைய காலத்தில் கேப்டன் வீரர்களுடன் சென்று கலந்து பேசும் பழக்கம் இருந்தது. அது தற்போது, விராட் கோலியிடம் இருக்கிறதா? இல்லையா? என்பது எனக்கு தெரியவில்லை என்றும், நான் அணி நிர்வாகத்தில் இல்லை என கூறினார். ஆனால், ஏசியா கோப்பைக்கு ரோகித் சர்மா கேப்டனாக சென்ற போது, அவர் அனைத்து வீரர்களுடனும் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார் என்று கேள்விப்பட்டேன் என சேவாக் குறிப்பிட்டார்.
இதைத்தொடர்ந்து 2012 காமன்வெல்த் தொடரில் டாப் ஆர்டரில் சுழற்சி முறையில் மாற்றம் கொண்டு வருவதைப் பற்றி மீடியாவில் பேசிய தோனி, தங்களை ஸ்லோவ் பீல்டர்கள் என்று விமர்சித்திருந்ததை ஷேவாக் சுட்டிக்காட்டினார். மேலும் அதுகுறித்து எங்களிடம் அவர் கேட்டதேயில்லை, கலந்து கொண்டதும் இல்லை. மீடியாவில் அவர் பேசிய பிறகுதான் எங்களுக்கே தெரியும் என்று தெரிவித்தார். தோனி வீரர்களுடனான கலந்துரையாடலின் போது சொல்லாமல் மீடியாவில் பேசியுள்ளார். தோனியைப் போல விராட் கோலியும் தற்போது வீரர்களிடம் கலந்துரையாடாமல் இருந்தால் அது தவறு என்றும், சேவாக் கூறியுள்ளார்.