#BREAKING:சிஏஏவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் மீண்டும் துப்பாக்கிச்சூடு .!
முதற்கட்ட தகவலின்படி நபரின் பெயர் கபில் குஜ்ஜர் என்பது வெளியாகியுள்ளது .குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஷாகின் பாக் பகுதியில் போராட்டம் நடைபெற்று வந்தது .இந்நிலையில் மாலை 4.53 மணிக்கு அங்கு வந்த அந்த நபர் வானத்தை நோக்கி இருமுறை சுட்டுள்ளார் .துப்பாக்கியால் சுட்டுவிட்டு இந்து மதத்திற்கு ஆதரவாக கோஷம் எழுப்பிவுள்ளார். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பின்பு அந்த நபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் அங்கு வந்த மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார் .இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் மாணவர் ஒருவர் காயமயடைந்தார்.இந்த சம்பவம் குறித்து ராம் பகத் கோபால் சர்மா என்பவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையியல் இரண்டாவது முறையாக நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றுதான் நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். அதுமட்டுமில்லாமல் டெல்லியில் சட்டமன்ற தேர்தலுக்கு பிரச்சாரம் நடைபெற்று வரும் நிலையில் இப்படி இரண்டு நாட்களில் இரண்டு முறை நடத்தப்பட்டுள்ள துப்பாக்கிச்சூடு அரசியல் தலைவர்களை பாதுகாப்பு பற்றி கேள்வியெழுப்பியுள்ளது.