சார்ஸை மிஞ்சிய கொரோனா வைரஸ்.! பலி எண்ணிக்கை 258 ஆக உயர்வு.!

Default Image
  • கொரோனா வைரஸ் சீனா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளில் பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
  • கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு பலியானோர்களின் எண்ணிக்கை 213-லிருந்து  258 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா:

சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் பரவியது. தற்போது கொரோனா வைரஸ் பெய்ஜிங் , ஷாங்காய் போன்ற பல நகரங்களில் பரவி உள்ளது. முதலில் இந்த வைரசால் 3 பேர் மட்டுமே பலியானதாக அதிகாரிகள் கூறினர்.பின்னர் தொடர்ந்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு பலியானோர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து கொண்டு வருகிறது.

பரவிய நாடுகள்:

கொரோனா வைரஸ் ஜப்பான், தென்கொரியா, தாய்லாந்து, அமெரிக்கா, தைவான், ஆஸ்திரேலியா, பிரான்சு மற்றும் இந்தியா போன்ற பல நாடுகளில் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

முகமூடி:

வுகான் நகரில் பேருந்து போக்குவரத்து சேவை ரெயில்வே சேவை மற்றும் விமான  சேவையும் நிறுத்தப்பட்டு உள்ளது. வுகான்  நகரில் உள்ளவர்கள் வைரஸ் பரவாமல் இருக்க முகத்தில் முகமூடிகளை அணிந்து கொண்டு வருகின்றனர்.

பலி எண்ணிக்கை:

இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு பலியானோர்களின் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரசால்  பாதிக்கப்பட்டதாக  கூறப்படுகிறது.நேற்று வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 213 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ஸை மிஞ்சிய கொரோனா:

உலகமெங்கும் கடந்த 2003-ம் ஆண்டு சார்ஸ் வைரஸ் பரவியது.இந்த வைரஸ் மொத்தமாக 24 நாடுகளில் பரவி 750-க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.இந்த சார்ஸ் வைரஸ் 8 மாதங்களாக 8,100 பேரை மட்டுமே தாக்கியது. ஆனால் தற்போது பரவி உள்ள கொரோனா வைரசால் சீனாவில் மட்டும் 258 பேர் இறந்து உள்ளனர். மேலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தாக்கி உள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்