தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பரவி உள்ளதா.?அதிர்ச்சி தகவல்!

- தமிழகத்தை சேர்ந்த ஒருவரையும் கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதா .?அதிர்ந்து போன தமிழ் மக்கள்.
- இதன் காரணமாக தமிழகத்தை சேர்ந்த நபர் தனி அறையில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளார்.
சீனாவில் உள்ள வுஹான் நகரத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் உலுக்கி எடுத்துள்ளது.இந்நிலையில் வுஹான் நகரத்தை சேர்ந்த மக்கள் வெவ்வேறு நாடுகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர்.
இதன் காரணமாக சீனா அரசு வெளிநாட்டில் உள்ள சீன மக்களை விரைவில் சிறப்பு விமானம் மூலம் தாய் நாட்டிற்கு கொண்டு வர முயன்று வருகின்றனர்.இந்நிலையில் சீனாவில் இருந்து கேரளா வந்த மாணவி ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த மாணவியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவர் தொடர்ந்து தீவிரசிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதைத்தொடர்ந்து சீனாவிலிருந்து திருவண்ணாமலை வந்த தமிழக மென்பொறியாளர் ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலையில் உள்ள வ.உ.சி நகரை சேர்ந்தவர் விமல் ஆவார்.இவர் சீனாவில் மென் பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார்.கடந்த டிசம்பர் 19-ம் தேதி சீனாவில் இருந்து சென்னை வந்துள்ளார்.பின்னர் சென்னையிலிருந்து திருவண்ணாமலை சென்றவருக்கு கடந்த மூன்று நாட்களாக சளி மற்றும் காய்ச்சல் இருந்துள்ளது.
இதன் காரணமாக அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று தான் சீனாவில் இருந்து வந்ததாகவும் தனக்கு கொரோனா வைரஸின் தாக்கம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து அவர் தனி அறையில் அனுமதிக்கப்பட்டு தீவிரமாக மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.இந்த தகவல் தமிழக மக்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
April 8, 2025
மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!
April 8, 2025